இரவு நேர பீச் பைக் ரேஸ் விபத்தில் சிக்கிய இளைஞர் பரிதாப பலி

0.00 avg. rating (0% score) - 0 votes

சென்னை: நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய பைக் ரேஸில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெரினா பீச் ரோட்டில் நேற்று இரவு ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். அதனால் பீச் ரோட்டில் பதற்றம் ஏற்பட்டது. சாலையில் சென்ற இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பைக் ரேஸ் இளைஞர்களைக் கண்டு அலறினர். இந்த பைக் ரேஸில், ராயபுரம் மஸ்தான் கோவில் பகுதியை சேர்ந்த நிஜாம், இர்பான் மற்றும் அக்பர் ஆகியோர் ஒரே வண்டியில் சென்று பந்தயத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments