சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

5.00 avg. rating (96% score) - 2 votes

தண்ணீர் லாரிகள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளில் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துச் சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்துச் செங்கல்பட்டு கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் தண்ணீர் லாரிகளைப் பறிமுதல் செய்தனர்.

அந்த லாரிகளை விடுவிக்கக் கோரி தென்சென்னை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த ஐந்தாம் தேதி வருவாய்த்துறையினருடன் பேச்சு நடத்தினர். இதில் எந்தத் தீர்வும் காணப்படாததால் ஆறாம் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சென்னைக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தத்தால் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் தண்ணீரில்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கணினி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தண்ணீர்லாரி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கணினி மென்பொருள் துறையைச் சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5.00 avg. rating (96% score) - 2 votes

Comments

comments