சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன்.. போலீசில் வாக்குமூலம் அளிக்க முன்வந்தார் இல்லத்தரசி

0.00 avg. rating (0% score) - 0 votes

News7 Tamil 0332cd08384fa9492c30e37e2323f4fc1200114432 சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன்.. போலீசில் வாக்குமூலம் அளிக்க முன்வந்தார் இல்லத்தரசி Tamil News

சென்னை: தலைநகர் சென்னையில், கத்திமுனையில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த கொள்ளையனுக்கு எதிராக 35 வயது பெண் போலீசில் முறைப்படி புகார் பதிவு செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதன் அறிவழகன் (28). பிஎஸ்சி கணிதம் படித்த அறிவழகன், சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொள்ளையடித்து வந்தான்.
நேற்று முன்தினம் வேளச்சேரி பகுதியில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தி முனையில் பணம் கொள்ளையடித்த பிறகு காவல்துறையிடம் பிடிபட்டான்.
சீரியல் ரேப்பிஸ்ட்
50 பெண்கள்
அறிவழகனிடம் நடத்திய விசாரணையில், பட்டப்பகலில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை கத்தி முனையில் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்தான்.
சுமார் 50 பெண்களை அவன் இவ்வாறு சீரழித்துள்ளான்.

மோசடி பேர்வழி
பல்வேறு டெக்னிக்குகள்
தண்ணீர் கேட்டு கதவை தட்டுவது, வீட்டுக்கு வெளியே தண்ணீர் குழாயை திறந்துவிடுவது போன்றவற்றின் மூலம் பெண்களை கதவை திறக்க வைத்து, அதன்பிறகு உள்ளே சென்று பலாத்காரம் செய்து அதை வீடியோ படம் எடுத்து மிரட்டியே மீண்டும் அந்த பெண்களை பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

குடும்ப தலைவி
இல்லத்தரசி புகார்
இதனிடையே, முதல் முறையாக பாதிக்கப்பட்ட 35 வயது இல்லத்தரசி ஒருவர் வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் பெண் அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கி பதிவு செய்து கொண்டனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

நடந்தது என்ன
மயங்கி சாய்ந்தார்
வாக்குமூலம் அளித்த அந்த பெண் கூறுகையில், சம்பவத்தன்று, அறிவழகன் தனது வீட்டுக்குள் நுழைந்ததையும், கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி தன்னை பலாத்காரரம் செய்ததையும் அந்த பயத்தில் தான் மயங்கி சாய்ந்ததையும் அழுதபடியே கூறியுள்ளார் அந்த பெண். நீதிமன்றத்தில், அந்த பெண் சாட்சியம் அளிப்பார் என தெரிகிறது. பாதிக்கப்பட்ட பிற பெண்களும் சாட்சியளிப்பார்கள் என காவல் துறை எதிர்பார்த்துள்ளது.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments