அட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை “கோச்” ஆக்குங்க.. அப்புறம் பாருங்க!

0.00 avg. rating (0% score) - 0 votes

சென்னை: இந்திய அணிக்கு வேறு யாரையும் பயிற்சியாளராகப் போட வேண்டாம். பேசாமல் கூல் டோணியையே பயிற்சியாளராக்கி விடலாம். அவரைத் தவிர வேறு யாருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பொருத்தமாக இருக்காது. என்னடா இது விளையாடிக் கொண்டிருப்பவரை போய் பயிற்சியாளராக்க சொல்கிறாரே என்று ஷாக்கிங்காக இருக்கிறதா.. இருக்கும். ஆனால் டோணி என்ற மாபெரும் வீரரால் மட்டுமே இந்திய அணியை இன்னும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்ற எண்ணத்தில்தான் இந்த வித்தியாசமான யோசனை.

News7 Tamil 23-1498201180-dhoni345 அட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை "கோச்" ஆக்குங்க.. அப்புறம் பாருங்க! Sports  no one wants to .. pataama toni

இந்திய அணியின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்த ஒரே நபர் டோணி மட்டும்தான். அதை விட முக்கியம், டோணியின் கீழ் இந்திய அணி மிகப் பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.
அதை விட முக்கியமாக கோஹ்லியை எப்படி டீல் செய்வது என்பது டோணிக்கு கை வந்த கலை. தான் கேப்டனாக இருந்தபோதும் சரி, இப்போது கோஹ்லி தலைமையின் கீழ் விளையாடும்போதும் சரி, டோணிக்கும் – கோஹ்லிக்கும் இடையே எந்தப் பெரிய கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.டோணியை ஏன் பயிற்சியாளராக்கலாம் என்பதற்கு பல காரணங்களை அடுக்கலாம். மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணியை பல சாதனைகளுக்கு இட்டுச் சென்றவர் டோணி மட்டுமே. அது ஒரு முக்கியமான பிளஸ் பாயிண்ட்.

News7 Tamil 23-1498201180-dhoni345 அட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை "கோச்" ஆக்குங்க.. அப்புறம் பாருங்க! Sports  no one wants to .. pataama toni

இக்காலத்து கிரிக்கெட்டின் அத்தனை உத்திகளும் டோணிக்கு அத்துப்படியானது. பழைய வீரர்களை பயிற்சியாளராகப் போட்டால் அவர்கள் காலத்து யோசனைகள்தான் அவர்களது தலையை நிரப்பியிருக்கும். டோணி அப்படி இல்லை. இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் வரைக்கும் ஞானம் உடையவர் டோணி.கேப்டனாக இருந்தபோது அவர் வகுத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. பேட்டிங் ஆர்டர், பீல்டிங் வியூகம், பவுலிங் வியூகம் என எல்லாவற்றிலும் அவர் தனது புத்திசாலித்தனத்தையும், வெற்றியையும் நிரூபித்தவர்.ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் டோணி மட்டுமே. இது ஒரு மிகப் பெரிய தகுதி அவருக்கு. எந்த இந்திய வீரரும் படைக்காத சாதனை இது.

News7 Tamil 23-1498201180-dhoni345 அட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை "கோச்" ஆக்குங்க.. அப்புறம் பாருங்க! Sports  no one wants to .. pataama toni

எந்த உலக கேப்டனும் படைக்காத சாதனை இது. டோணி 12 வருடமாக கிரிக்கெட் ஆடி வருகிறார். இதில் 10 வருட காலம் அவர் கேப்டனாக இருந்துள்ளார்.உள்ளூர் அளவிலான கிரிக்கெட்டிலும் (ஐபிஎல்), சர்வதேச கிரிக்கெட்டிலும் டோணி பல முத்திரைகளைப் பதித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு மிகப் பெரிய பிராண்ட் ஆக மாற்றிய மிகப் பெரிய சாதனையாளர். அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டு போகலாம்.டோணி கேப்டனாக இருந்தபோதுதன் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. கேப்டனாக இருந்தபோது இவர் 11 தொடர் டெஸ்ட் போட்டி வெற்றிகளைப் பெற்றுள்ளார். 4000 டெஸ்ட் ரன்களைக் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோணிதான்.

டோணிதான் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் ஆவார். மொத்தம் 24 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வென்றுள்ளார் டோணி. கங்குலியின் சாதனை 21. உலக அளவில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் வரிசையில் டோணி முக்கிய இடத்தில் இருக்கிறார். இரட்டைச் சதத்தில் சாதனை சர்வதேச அளவில் ஒரு கேப்டனாக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மிகப் பெரிய ஸ்கோரை எடுத்த சாதனையாளர் டோணி. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 224 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஆஸ்திரேலிய சாதனை முறியடிப்பு வழக்கமாக அதிக வெற்றிகளைப் பெறுவது ஆஸ்திரேலியாவாகத்தான் இருக்கும். அதை மாற்றி 100 போட்டிகளில் வென்று சாதனை படைத்தவர் டோணி. 100 போட்டிகளை வென்ற ஆஸ்திரேலியர் அல்லாத முதல் கேப்டன் டோணி. விக்கெட் கீப்பர்கள் வரிசையில் அதிக ரன்கள் குவித்து வைததுள்ளவர் டோணிதான். கேப்டன் 199 கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் அதிக போட்டிகளில் ஆடிய பெருமைக்குரியவர் டோணி மட்டும்தான். மொத்தம் 199 போட்டிகளில் இதுபோல அவர் செயல்பட்டு ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்தவர் டோணி. டோணியின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் கேப்டனாக, வீரராக, விக்கெட் கீப்பராக சாதனை படைத்தவர் டோணி. பயிற்சியாளர் பதவியிலும் அவர் நிச்சயம் ஜொலிக்க முடியும். அவரது கேரக்டருக்குப் பொருத்தமான வேலையும் கூட. இவரை விட பொருத்தம் யார் கேப்டன் கூல் என்ற பெயரைப் பெற்றவர் டோணி. சத்தம் போடாமல் காரியம் சாதிப்பதில் வல்லவர். யாரிடம் என்ன திறமை உள்ளதை என்பதை அறிந்து தட்டிக் கொடுத்து ஊக்குவித்து வேலை வாங்குபவர். மிகச் சிறந்த திறமையாளர். எதிராளியின் பலவீனத்தை சரியாக கணித்து குறி பார்த்து அடிக்கக் கூடியவர். இப்படி எப்படிப் பார்த்தாலும் டோணியை விட சிறந்தவரைப் பார்க்க முடியாது. எனவே பேசாமல் டோணியையே பயிற்சியாளராக்கலாம். செம பலம் ரிடையர்ட் ஆனவர்கள்தான் பயிற்சியாளராக வேண்டும் என சட்டமா இருக்கிறது. லைம்லைட்டில் உள்ளவர்களை அதுவும் டோணி போன்றவர்கள் பயிற்சியாளராக வந்தால் அது இந்திய அணிக்கு உண்மையிலேயே செம பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமே தேவையில்லை.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments