அந்தோ பரிதாபம்: சென்னை கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்

0.00 avg. rating (0% score) - 0 votes

சென்னை: காதல் படத்தில் நடித்த பல்லு பாபு தற்போது சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வருகிறார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் காதல். பட்டிதொட்டி எல்லாம் காதல் பட பாடல்கள் ஒலித்தன.

News7 Tamil kadhalmoviefameactor-babu-23-1498190966 அந்தோ பரிதாபம்: சென்னை கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர் Movies  Kadhal movie actor who takes the begging in the temple of Chennai

அந்த படத்தில் விருச்சிககாந்தாக நடித்தவர் பல்லு பாபு. நடிச்சா ஹீரோ தான் சார், அப்புறம் அரசியல் சிஎம், பிஎம் என்று அவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். காதல் படத்திற்கு பிறகு அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மனம் நொந்து போன அவர் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரின் தாயும், தந்தையும் இறந்துவிட்டதால் கவலையில் ஆழ்ந்தார். பாபு தற்போது சூளைமேட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வருகிறார். மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments