தனுஷ் படம் : உறுதி செய்தது தேனாண்டாள் பிலிம்ஸ்

0.00 avg. rating (0% score) - 0 votes

News7 Tamil b32b139ac3966ecec2fbe50fc543944f146490277 தனுஷ் படம் : உறுதி செய்தது தேனாண்டாள் பிலிம்ஸ் Movies

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக விஜய் நடித்த மெர்சல், தீபாவளிக்கு வெளிவந்தது. அட்லீ இயக்கிய இந்தப்படம் ஜிஎஸ்டி சர்ச்சையில் சிக்கி மெகா ஹிட்டடித்தது. இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி – ஆர்யா நடிக்கும் சங்கமித்ரா என்ற பிரமாண்ட படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் அது எப்போது ஆரம்பிக்கும் என்றே தெரியவில்லை. இந்த நிலையில், அடுத்தபடியாக தனுஷை வைத்து ஒரு படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதை இந்நிறுவனத்தின் ஹேமா ருக்மணி டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய்யைத் தொடர்ந்து மல்டி டேலண்ட் ஆர்ட்டிஸ்ட் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்கிறோம். படம் பற்றிய மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments