கட்சி தொடங்க பணம் : ரசிகர்களிடமே திருப்பி தரும் கமல்

0.00 avg. rating (0% score) - 0 votes

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்க உள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது மக்களை தொடர்பு கொள்ள “மய்யம் விசில்” என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். ஜனவரி முதல் இதன் செயல்பாடு துவங்க உள்ளது. தான் அரசியல் கட்சி தொடங்க மக்கள் பணம் தருவார்கள் என்றார். தற்போது கமலுக்கு நிறைய பேர் பணம் அனுப்பி வருவதாகவும், அதை தான் திருப்பி அனுப்பி வைத்து வருவதாகவும் கமல் கூறியுள்ளார்.

News7 Tamil eeddf617a975bea4367e830a1ad1eb6f1074397349 கட்சி தொடங்க பணம் : ரசிகர்களிடமே திருப்பி தரும் கமல் Movies

இதுதொடர்பாக கமல் வார இதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது… கடந்த 37 ஆண்டுகளில் என் நற்பணி மன்றத்தார் ரூ.30 கோடிக்கும் அதிகமாக பணம் கொடுத்து நற்பணி செய்துள்ளார்கள். நிச்சயமாக தனிப்பட்ட முறையில் என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது.
பணம் தவிர பண மதிப்பே செய்ய முடியாத லட்சம் லிட்டர் ரத்தம், விலையில்லாத உடல்தானம், கண்தானம் எல்லாம் எந்த பட்ஜெட்டிலும் அடக்க முடியாது. நான் கட்சி நடத்த மக்கள் பணம் தருவார்கள் என்பது ரசிகர்கள் தருவார்கள் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனக்கு இப்போதே பணம் வர தொடங்கி விட்டது. இப்போது வாங்கினால் சட்ட விரோதம்.

ஆகவே, வந்த எல்லாவற்றையும் அவர்களுக்கே திருப்பி அனுப்பி வருகிறேன். இப்படி செய்வதால் நான் வாங்குகிறேன் என்று அர்த்தமில்லை, சரியான கட்டமைப்பு இல்லாமல் படணத்தை தொடக்கூடாது என்பதற்காகத் தான். நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகிவிட்டது. இன்னும் பெயர் வைக்க வேண்டும்; பதிவு செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

எனக்கு பின்னாலும் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். ஆகவே, கட்டமைப்புகள், தளம் எல்லாம் சரியாக அமைய வேண்டும். எனது பயணம் சீட்டை நோக்கிய நகர்வு கிடையாது. தமிழகம் நல்ல தமிழகமாக வர, வளர வேண்டும் என்பது தான் என் ஆசை.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments